இது தான் அந்த ரகசியம்... ராஷி கண்ணா எடையை குறைத்தது இப்படி தானாம்
ராஷி கண்ணா அவரது உடல் எடையை எவ்வாறு குறைத்தார் என்பது பற்றிய சில குறிப்புகள் வெளியாகியுள்ளன. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே நடிகைகளை போல் அழகான உடல் அமைப்பு வேண்டும் என்று பலர் பல விடயத்தை செய்து வருவார்கள். அதிலும் ஒரு சில பிரபலங்கள் உடல் எடையை எவ்வாறு குறைத்தார்கள் என பகிர்ந்துக்கொள்வதும் வழக்கம்.
அந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'மெட்ராஸ் கபே' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் தான் ராஷி கண்ணா.
இவர் அதையடுத்து தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இதனால் அவருக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஜய் சேதுபதிக்கு ஜடியாக சங்கத்தமிழன், ஆர்யாவுக்கு ஜோடியாக அரண்மனை 3 என படங்களில் நடித்த ஆரம்பித்தார்.
இவ்வாறு அவருக்கு பல பட வாய்ப்புகள் வருவதால் தனது உடல் அமைப்பு மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் உடல் எடையும் குறைத்தார். எப்படி அதை அவ்வளவு சீக்கிரமாக சாத்தியப்படுத்தினார் என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.
- உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் யோகா செய்துள்ளார்.
- தினமும் நடைப்பயிற்சி மேற்க்கொண்டுள்ளார்.
- வாரத்திற்கு 2 முறை ஜிம்மிற்கு செல்வாாராம்.
- கால்களை நீட்டும் உடற்பயிற்சியை தினமும் முறையாக செய்துள்ளார்.
- தினசரி உடற்பயிற்சியில் நடனத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |