நீங்க நடந்தாலே போதும்...! சூப்பரா உடல் எடையை குறைத்திடலாம்
பொதுவாகவே அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினை என்றால் அது உடல் எடை அதிகரிப்பு தான்.
அதை சரிசெய்வதற்கு கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுவதுடன், உங்கள் எடையை நிர்வகிக்க உதவுவதில் பயனுள்ளதாக அமையும்.
அதில் நடைபயிற்சி ஒரு சிறந்த உடல் செயல்பாடு ஆகும்.
அடிக்கடி நடப்பது எடை மற்றும் தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைக்க உதவும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நடைபயிற்சி
குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க உதவுவது இந்த நடைபயிற்சி தான். 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சில நிமிடங்களுக்கு சிலர் வேகமாக நடப்பதை பார்க்கலாம்.
ஆனால் பவர் வாக்கிங் என்பது சாதாரண வேகத்தில் சுமார் 10 நிமிடங்கள் நடந்துவிட்டு, அதன் பின்னர் 2 நிமிடங்களுக்கு வேகமாக நடக்க வேண்டும். பின் சாதாரண வேகத்தில் நடக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சோர்வடையாமல் கூடுதல் கலோரிகளை எரிக்கலாம்.
10-15 நிமிடங்கள் நடந்த பிறகு, சிறிது நேரம் ஸ்க்வாட்ஸ், புஷ்அப்கள், கிக்-பேக் மற்றும் ஹை-நீ போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். நடக்கும் பொழுது அசையாத தசைகள் அனைத்தும் இவைகளையும் செய்யும் போது அசையும்.
உங்கள் நடைப்பயணத்தின் தீவிரத்தை அதிகரிக்க மற்றும் அதிக கலோரிகளை எரிக்க, மலைகள் அல்லது சிறிய சாய்வுகள் உள்ள பாதைகளில் நடக்க முயற்சிக்கவும்.
தினமும் 10 ஆயிரம் படிகள் நடக்கவும். அதிக கலோரிகளை எரிக்கவும் முடியும். இதன் மூலம் உடல் எடையை குறைத்து விடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |