ஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்: நிபுணர் குறிப்பு
உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்சனையாகும்.
இதில் உள்ள குறிப்புகளை சரியாகப் பின்பற்றினால், 15 நாட்களில் 2-3 கிலோ வரை எடையை எளிதில் குறைக்கலாம்.
இதற்கான குறிப்புகளை ஊட்டச்சத்து நிபுணரான சிம்ரன் கவுர் கூறியது.
healthline
குறிப்புகள்
உடல் எடையை குறைக்க உணவில் சரியான அளவு புரதத்தை சேர்க்க வேண்டும். இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாமல் இருக்கும்.இதனால் உடல் எடை குறைய நிறைவே வாய்ப்புகள் உள்ளது.
பருப்பு வகைகள், முட்டை, பீன்ஸ், உலர் பழங்கள், பயறு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் தினசரி உணவில் கார்போஹைட்ரேட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சேர்த்துக் கொள்ளவும்.
pixabay
உடல் எடையைக் குறைக்க வெள்ளரிக்காய் சியா விதைகள், புதினா, இஞ்சி போன்ற ஆரோக்கியமான சில பொருட்களை தண்ணீருடன் சேர்த்து குடிக்கலாம்.இந்த நீர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு மட்டுமின்றி உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
ஆப்பிள், இஞ்சி, கிரீன் டீ, பாதாம், தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற உணவுகள் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
உடல் ஆரோக்கியம் சீராக, வயிறு சுத்தமானால் உடல் எடை குறைப்பதும் சுலபமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |