இலங்கை அணியை திணறவைத்த தமிழக வீரர்! இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 240 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பெர்னாண்டோ-மெண்டிஸ் கூட்டணி
கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணியில், நிசங்கா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அடுத்து கைகோர்த்த அவிஷ்கா பெர்னாண்டோ (Avishka Fernando) மற்றும் குசால் மெண்டிஸ் (Kusal Mendis) கூட்டணி 74 ஓட்டங்கள் சேர்த்தது.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் ஓவரில் 40 ஓட்டங்கள் எடுத்த அவிஷ்கா பெர்னாண்டோ அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் குசால் மெண்டிஸ் 30 (42) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் ஓவரிலேயே LBW ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த சமரவிக்ரமா 14 ஓட்டங்களிலும், அணித்தலைவர் சரித் அசலங்கா 25 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர். இதனால் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 136 ஓட்டங்கள் என தடுமாறியது.
துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் அபாரம்
அப்போது துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 240 ஓட்டங்கள் எடுத்தது. வெல்லாலகே 39 (35) ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 40 (44) ஓட்டங்களும் குவித்தனர்.
இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |