அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை..கௌரவ ஸ்கோரை எட்ட உதவிய வீரர்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
அவிஷ்கா பெர்னாண்டோ 20 ஓட்டங்களும், நுவனிந்து பெர்னாண்டோ 50 ஓட்டங்களும் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
Nuwanidu Fernando made his international debut, and he did it with great style. ?#INDvSL pic.twitter.com/DO1kIGH4wN
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) January 12, 2023
அதன் பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். இதனால் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. கேப்டன் ஷனகா 2 ஓட்டங்களிலும், தனஞ்ஜய டி சில்வா ஓட்டங்கள் எடுக்காமலும் வெளியேறினர்.
அணியை காப்பாற்றிய வெல்லாலகே
இலங்கை அணி 200 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஆல்ரவுண்டர் வீரர் வெல்லாலகே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
34 பந்துகளை எதிர்கொண்ட அவர், ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்து 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். கருணாரத்னே மற்றும் கசுன் ரஜிதா தலா 17 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை அணி 215 ஓட்டங்கள் எடுத்தது.
Sri Lanka finish on 215. Can we defend it?#INDvSL pic.twitter.com/GOI2tcfWY5
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) January 12, 2023
இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ், சிராஜ் தலா 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
@PTI
@BCCI