லண்டனில் ஒரே குடியிருப்பில் 40 பேர்களை குடியிருக்கவைத்த நபர்: வெளிவரும் விரிவான பின்னணி
லண்டனில் 4 படுக்கையறை கொண்ட குடியிருப்பு ஒன்றில் 40 வாடகைதாரர்களை குடியிருக்கவைத்த விவகாரத்தில் அதிகாரிகளிடம் சிக்கிய ஜெய்திப்குமார் ரமேஷ்சந்திரா என்பர் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாடகைக்கு விடுவதில் இருந்து தடை
குறித்த நபர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் குடியிருப்புகளை வாடகைக்கு விடுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார். வடக்கு லண்டன் கவுன்சில் நிர்வாகம் முன்னெடுக்கும் முதல் தடை உத்தரவு இது என்றே கூறப்படுகிறது.
Credit: Brent Council
கடந்த 2018ல் இருந்தே தற்போது 48 வயதாகும் ஜெய்திப்குமார் ரமேஷ்சந்திரா இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக ப்ரெண்ட் கவுன்சில் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளது.
வெம்ப்லி சென்ட்ரலில் உள்ள ஸ்விண்டர்பி சாலையில் குடியிருப்பு ஒன்றில் குடும்பத்தினருடன் வாழ்ந்துவரும் ஜெய்திப்குமார் ரமேஷ்சந்திரா, இதுபோன்ற முறைகேடுகளில் சிக்கிய நால்வரில் ஒருவர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 40 பேர்களை குடியிருக்க வைத்து சுமார் 360,000 பவுண்டுகளை ஈட்டியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் ஒரு குடியிருப்பாளர் மின்சார வசதி அல்லது குளிர் போக்கும் வசதி ஏதும் இல்லாமல் பலகைகள் மற்றும் தார்ப்பாய்களால் ஆன மெல்லிய குடிசையில் குடியிருந்ததும், அதிகாரிகளால் அம்பலமாகியுள்ளது.
மாதம் 1.400 பவுண்டுகள் வரையில்
மேலும், 5,000 பவுண்டுகளுக்கு பறிமுதல் உதரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், ஜெய்திப்குமார் ரமேஷ்சந்திரா அப்பாவி குடியிருப்பாளர்களை மோசடி செய்துள்ளார் என்றே கூறுகின்றனர்.
Credit: Brent Council
மட்டுமின்றி, வாடகைதாரர் ஒப்பந்தம் ஏதுமின்றி, குடியிருக்க வைத்து மாதம் 1.400 பவுண்டுகள் வரையில் ஜெய்திப்குமார் ரமேஷ்சந்திரா வசூலித்துள்ளார். 2022 ஜனவரி மாதம் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில்,
30,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், நீதிமன்ற செலவுகளுக்காக 3,347 பவுண்டுகளும் செலுத்த தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், 5 ஆண்டுகள் தடை உத்தரவை ஜெய்திப்குமார் ரமேஷ்சந்திரா மீறியதாக அறியவந்தால், அது சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |