74 பந்தில் 120 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்! இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து
மகளிர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
நட் சிவெர் அதிரடி சதம்
இலங்கை - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிரேஸ் ரோட் மைதானத்தில் நடந்தது.
மழை காரணமாக 31 ஓவர்கள் போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 273 ஓட்டங்கள் குவித்தது.
The mighty Boosh has 50! ?#EnglandCricket #ENGvSL pic.twitter.com/lWB06tWhmE
— England Cricket (@englandcricket) September 14, 2023
கேப்டன் நட் சிவெர் பிராண்ட் 74 பந்துகளில் ஒரு சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் 120 ஓட்டங்கள் குவித்தார்.
Graham Wilson/Action Plus/Shutterstock
தொடக்க வீராங்கனை பௌசியர் 65 பந்துகளில் 95 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) விளாசினார். இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹாரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 24.5 ஓவர்களில் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 112 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 32 (24) ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்தின் சார்லோட்டே டீன் 5 விக்கெட்டுகளும், லாரென் ஃப்ளேர் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
Andrew Boyers/Action Images/Reuters
Matt West/Shutterstock
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |