69 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்! 10 விக்கெட் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி
கவுகாத்தியில் நடந்த மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில், இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
சுருண்ட தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக்கிண்ணத் தொடரில் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் கவுகாத்தியில் மோதின.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி படுமோசமாக துடுப்பாடியது. அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஸ்கோரை உயர்த்த போராடிய சினாலோ ஜாப்தா 22 ஓட்டங்கள் எடுத்து 9வது விக்கெட்டாக அவுட் ஆனார். அவர் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்களை எடுத்தார்.
கடைசி விக்கெட்டாக லாபா ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து அணி வெற்றி
லின்சே ஸ்மித் (Linsey Smith) 3 விக்கெட்டுகளும், நட் சிவர் ப்ரண்ட், சோபி டிவைன் மற்றும் சார்லி டீன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஏமி ஜோன்ஸ் 40 ஓட்டங்களும், டம்மி பியூமன்ட் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெற்ற முதல் பெரிய வெற்றியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |