அன்று சைக்கிளில் சென்று சோலா பூரி விற்பனை.., இன்று பல கோடி மதிப்பில் சாம்ராஜ்ஜியம்
சைக்கிளில் சென்று சோலா பூரி விற்பனை செய்த இருவரின் முயற்சி இன்று பல கோடி மதிப்பில் சாம்ராஜ்ஜியம் உருவாக காரணமாக அமைந்துள்ளது.
சைக்கிளில் விற்பனை
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள தெருவோரக் கடைகளை பற்றி பேசும்போது சோலே பட்டூரா தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அதனுடன் மசாலாவை வைத்து சாப்பிடும் அனுபவம் மறக்க முடியாதது ஆகும்.
கடந்த 1995-ம் ஆண்டில் சீதா ராம் மற்றும் திவான் சந்ந் ஆகியோர் சைக்கிளில் சென்று பஹர்கஞ்ச் டிஏவி பள்ளிக்கு முன்பு சூடான சோலே பட்டூராவை விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.
பின்னர், 1970-ம் ஆண்டில் இவர்களின் விற்பனை பிரபலமடைந்து இம்பீரியல் சினிமா ஹால் எதிரில் ஒரு சிறு கடையை திறந்தனர்.
இது டெல்லியின் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்ததால் மக்கள் பலரும் இதனை வாங்கி சாப்பிட ஆரம்பித்தனர். இவர்களின் வணிகம் இதன் மூலம் பெருக தொடங்கியது.
இதன்பின்னர், 2008-ம் ஆண்டில் சீதாராம் மற்றும் திவான் சந்த் குடும்பத்தின் பேரக்குழந்தைகளான ராஜீவ் கோஹ்லி மற்றும் உத்சவ் கோஹ்லி ஆகியோர் இந்த வியாபாரத்தை எடுத்துச் சென்றனர்.
அதாவது, டெல்லியில் உள்ள பிதம்புரா, பஸ்சிம் விஹார் மற்றும் குருகிராம் ஆகிய முக்கிய பகுதிகளில் கிளைகளை தொடங்கினர். இவர்களின் சோலே பட்டுராவின் சுவை தனித்துவமாக இருந்ததால் பலருக்கும் பிடிக்க ஆரம்பித்தது.
மேலும், ஒரே சுவையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டதால் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்தது.
தற்போது இந்த வணிகம் புனீத் கோஹ்லியின் தலைமையில் டிஜிட்டல் முறையில் நடக்கிறது. மேலும், உணவு டெலிவரி தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மூலமாக ஒன்லைனலில் வியாபாரம் செய்யப்படுகிறது.
சைக்கிளில் ஆரம்பித்த வணிகம் இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |