கச்சா எண்ணெய், எரிவாயுவை தொடர்ந்து…ரஷ்ய வைரங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி தடை
கச்சா எண்ணெய்களை தொடர்ந்து ரஷ்யா வைரங்களுக்கும் மேற்கத்திய நாடுகள் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய வைரங்களுக்கு தடை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுகளுக்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்து இருந்தனர்.
இந்நிலையில் புதிதாக ரஷ்ய வைரங்களுக்கும் தடை விதிப்பது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Getty
உலகின் ஒட்டுமொத்த வைர உற்பத்தியில் 3ல் 1 பங்கு ரஷ்யாவில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது, பின் அவை பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆன்ட்வெர்ப் நகர தொழிற்சாலையில் பட்டை தீட்டப்படுகிறது.
வைர உற்பத்தி மூலமாக ரஷ்யாவிற்கு ஆண்டுக்கு சுமார் 33 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதால், அதை முடக்கும் வகையில் ஜி7 நாடுகள் ரஷ்ய வைரங்களுக்கு தடை விதிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
Getty
உத்தரவுகள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், ஆன்ட்வெர்ப் நகர வைர வியாபாரிகள் கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வைரங்களை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |