சிக்னலில் நிற்காமல் போன சரக்கு ரயில்? மேற்குவங்க ரயில் விபத்துக்கு காரணம் இது தான்
மேற்குவங்க மாநிலத்தில் பயணிகளின் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்துக்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் விபத்து
மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை 8 மணிக்கு பயணிகளின் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பயணிகள் ரயிலில் உள்ள 5 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 25 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
என்ன காரணம்?
இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் போனது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதோடு, உயிரிழப்புகள் அதிகமாகலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரயில் விபத்தால் அப்பகுதியில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்திற்கு இந்திய பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |