புலம்பெயதலுக்கு எதிரான பிரேரணை: கைகோர்த்த சுவிஸ் மாகாணங்கள்
சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு, அதர்கான வாக்கெடுப்புக்கான நாளும் குறிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், அந்த பிரேரணைக்கு எதிராக சுவிஸ் மாகாணங்கள் சில கைகோர்த்துள்ளன.
புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

அதாவது, புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன்மூலம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என அக்கட்சி கோரி வருகிறது.
புலம்பெயர்ந்தோரால் வீடுகள் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுவிஸ் மக்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி இந்த பிரேரணையை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ளது.
ஜூன் மாதம் 14ஆம் திகதி அந்த பிரேணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைகோர்த்த சுவிஸ் மாகாணங்கள்
இந்நிலையில், மேற்கு சுவிஸ் மாகாணங்கள், No to 10 Million Switzerland பிரேரணைக்கு எதிராக கைகோர்த்துள்ளன.
நேற்று, பிரெஞ்சு மொழி பேசும் மேற்கு சுவிஸ் மாகாணங்கள் இணைந்து நடத்திய மாநாடு ஒன்றில், அந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அந்த பிரேரணை, மக்கள்தொகை பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தாது என்று கூறியுள்ள ஜெனீவா மாகாண அரசின் தலைவரான Nathalie Fontanet, மாறாக, அது புதிய பிரச்சினைகளைத்தான் உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள No to 10 Million Switzerland பிரேரணை, மாகாண இறையாண்மையையும் தேசிய ஒருமைப்பட்டையும் மீறுவதாக மாநாட்டில் பங்கேற்ற மாகாண பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்துடன், Jura போன்ற மாகாணங்களில் மக்கள்தொகை அதிகரிக்காத நிலை காணப்படும் நிலையில், இந்த பிரேரணை அந்த மாகாணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |