கனடாவில் பேருந்துக்காக காத்திருந்த இருவருக்கு கத்திக்குத்து: மூன்று பேரை கைது செய்த பொலிஸார்
கனடாவின் மேற்கு எட்மண்டன் மால் போக்குவரத்து நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வழிப்பறி மற்றும் கத்திக்குத்து சம்பவம்
கனடாவின் மேற்கு எட்மண்டன் மால் போக்குவரத்து நிலையத்தின் வடக்கு பகுதியில் அக்டோபர் 1ம் திகதி காலை சுமார் 5.30 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்த 24 மற்றும் 45 வயதுடைய இரண்டு பேரை மூன்று மர்ம நபர்கள் அணுகியுள்ளனர்.
மேலும் அவர்களிடம் ஸ்மார்ட்போன்களை வழங்குமாறு மர்ம நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் வழங்க மறுக்கவே மர்ம நபர்களில் ஒருவர் இருவரையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
அத்துடன் அவர்களிடம் இருந்த ஸ்மார்ட்போன்களையும் பறித்து கொண்டு சம்பவ இடத்திலிருந்து மிதிவண்டிகளில் தப்பிச் சென்றுள்ளனர்.
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய இருவர்
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்து இல்லாத சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மூவர் கைது
வழிப்பறி மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் மூவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் மூவர் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |