பிரித்தானிய பொருளாதாரத்தை இந்தியப் பொருளாதாரம் முந்திவிட்டது: முன்னாள் பிரித்தானிய பிரதமர் பேச்சு
பிரித்தானிய பொருளாதாரத்தை இந்தியப் பொருளாதாரம் முந்திவிட்டது என முன்னாள் பிரித்தானிய பிரதமர் ஒருவர் கூறியுள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட முன்னாள் பிரித்தானிய பிரதமரான லிஸ் ட்ரஸ், பிரித்தானிய பொருளாதாரத்தை இந்தியப் பொருளாதாரம் முந்திவிட்டது என்று கூறியுள்ளார்.
பிரித்தானிய பொருளாதாரத்தை இந்தியப் பொருளாதாரம் முந்திவிட்டது, அத்துடன், இந்தியாவில் தலைசிறந்த பொருளாதாரக் கொள்கைகளும், மறுசீரமைப்புகளும் நடைபெற்றுவந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவும் பிரித்தானியாவும், தொழில்நுட்பம் மறும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒருவரிடமிருந்து மற்றவர் பெற்றுக்கொள்ளவேண்டியுள்ள பரஸ்பர நன்மைகள் பல உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா மிகப்பெரிய தலைமைத்துவ பொறுப்பை வகிக்கவேண்டியுள்ளதுடன், கடந்த 100 ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் காட்டிவந்துள்ளது என்றார் லிஸ் ட்ரஸ்.
புவிசார் அரசியலில் இந்தியாவின் பங்கு குறித்து பேசிய லிஸ் ட்ரஸ், உலகில் அதிக மக்கள்தொகையுடையதும், நீண்டகால ஜனநாயக நாடுமான இந்தியா, எதிர்காலத்தில் மிகப்பெரிய தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கவேண்டியுள்ளது, அது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கத்தக்க ஒரு செய்தியாகும்.
சீனாவால் எழும் அச்சுறுத்தல்களை கருத்தில்கொள்ளும்போது, Quad கூட்டமைப்பில் இந்தியா பங்குவகிப்பது குறிடத்தக்கவகையில் முக்கியமானதாகும் என்றும் கூறியுள்ளார் லிஸ் ட்ரஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |