இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வரூபம்..வங்காளதேசத்தை அதிரடியாக வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்
West indies beat bangladesh in dhaka 1st test: வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
டாக்காவில் நடந்த முதல் டெஸ்டில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
சுருண்ட வங்காளதேசம்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்தது.
வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 272 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 245 ஓட்டங்களும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்காளதேச அணி 142 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நயீம் ஹசன் (Nayeem Hasan) 52 ஓட்டங்கள் எடுத்தார்.
பிரண்டன் கிங் 81
ரஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளும், ஜோமெல் வாரிகன் 4 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோசப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 170 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், 35.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்றது.
பிரண்டன் கிங் 81 ஓட்டங்களும், ஜான் கேம்பெல் 49 ஓட்டங்களும் எடுத்தனர். மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜோமெல் வாரிகன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
