கடைசிவரை நின்ற பாபர் அஸாம்: 120 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்..மே.தீவுகள் மிரட்டல் வெற்றி
ட்ரினிடாட்டில் நடந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
மேற்கிந்திய தீவுகள் 311
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடந்தது.

முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ஓட்டங்களும், பாகிஸ்தான் 282 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

211 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) பந்துவீச்சில் சரிந்தது.
போராடிய பாபர் அஸாம்
அணித்தலைவர் பாபர் அஸாம் மட்டும் போராட, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கடைசி விக்கெட்டாக மொஹம்மது அப்பாஸ் 23 ஓட்டங்களில் அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. பாபர் அஸாம் (Babar Azam) ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, ஜஸ்டின் கிரீவ்ஸ் (Justin Greaves) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |