ஷாய் ஹோப் அதிரடி ஆட்டம் - இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்
இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் வெற்றி
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டி20, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
மழை காரணமாக 2 ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஒரு போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

இரு அணிகளுக்கும் இடையே ஜமைக்காவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக, இலங்கை தரப்பில் கமிந்து மென்டிஸ் 51 ஓட்டங்கள் குவித்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில், ஷாமர் ஜோசப், ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், 19.2 ஒவர்களில் 3 விக்கெட்களை இழந்து, 149 ஓட்டங்களை எட்டியது.
மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அணித்தலைவர் ஷாய் ஹோப், 65 ஓட்டங்கள் குவித்தார்.
4 ஓவர்கள் வீசி, 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |