இன்னிங்ஸ் மற்றும் 217 ரன் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வி: சம்பவம் செய்த இருவர்
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடந்தது.

இலங்கை முதல் இன்னிங்ஸில் 308 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் அணி 626 ஓட்டங்களும் குவித்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. சண்டிமல் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
ரோச் அபாரம்
கேமர் ரோச் 4 விக்கெட்டுகளும், ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோசப் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |