மொயீன் அலியின் அதிரடி வீண்: சரித்த பிராவோ..மகுடம் சூடிய மேற்கிந்திய தீவுகள்
West indies champions won legends world championship: லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்று மகுடம் சூடியது.
இங்கிலாந்து அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணி, லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
மொயீன் அலி அதிரடி
இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான, லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
DJ BRAVO ON FIRE! 🔥💃 3 major wickets, just 21 runs in 4 overs, and an economy rate of 5.25! 🎯 England Champions under pressure, while DJ Bravo celebrates in true champion style! 🏏🔥 . . . #wcl #wcl2026 #djbravo #westindieschampions https://t.co/3aihZIE8Mn
— World Championship Of Legends (@WclLeague) October 18, 2026
முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப, மொயீன் அலி (Moeen Ali) அதிரடியாக 39 பந்துகளில் 60 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினார்.
ஓவைஸ் ஷா 28 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் விளாச, இங்கிலாந்து சாம்பியன்ஸ் 159 ஓட்டங்கள் சேர்த்தது.
மிரட்டலாக பந்துவீசிய டிவைன் பிராவோ (Dwayne Bravo) 3 விக்கெட்டுகளும், ஃபெடெல் எட்வர்ட்ஸ், ஷெல்டன் காட்ரெல், ரேமோன் ரெய்ஃபர் மற்றும் கார்லோஸ் பிராத்வெய்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மேற்கிந்திய தீவுகள் சாம்பியன்
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது.
சிம்மோன்ஸ் 77 (53) ஓட்டங்களும், வால்டன் 58 (35) ஓட்டங்களும் விளாசினர். மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் 2 சிக்ஸர்களுடன் 21 (14) ஓட்டங்கள் விளாசினார்.
டிவைன் பிராவோ ஆட்டநாயகன் விருதும், தொடரில் 342 ஓட்டங்கள் குவித்த சாத்விக் வால்டன் (Chadwick Walton) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
