2வது ஒரு நாள் போட்டியிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் விலகல்! இந்திய ஓபனிங் ஜோடி மாற்றம்
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியிலிருந்து அசௌகரியம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி இன்று பிப்ரவரி 9ம் திகதி அகமதாபாத் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக தொடங்கியுள்ளது.
2வது ஒரு நாள் போட்டிக்கு பொல்லார்டுக்கு பதிலாக வெஸ்ட் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற பூரன், முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார். அதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணி பிளேயிங் லெவனில் இஷான் கிஷானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேப்டன் ரோகித்துடன் ரிஷப் பந்த் ஓபனிங் இறங்கியுள்ளார்.
? Team News ?
— BCCI (@BCCI) February 9, 2022
1⃣ change for #TeamIndia as KL Rahul replaces Ishan Kishan in the team. #INDvWI @Paytm
Follow the match ▶️ https://t.co/yqSjTw302p
Here's our Playing XI ? pic.twitter.com/sDT416fVjx
அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவனில் பொல்லார்டுக்கு பதிலாக ஒடியன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார்.
The #MenInMaroon playing XI. One change, all-rounder Odean Smith in for @KieronPollard55. #INDvsWI pic.twitter.com/kQl7fxT2D4
— Windies Cricket (@windiescricket) February 9, 2022
2வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்,
- ரோகித் சர்மா (கேப்டன்)
- கே.எல்.ராகுல்
- விராட் கோலி
- ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
- சூர்யகுமார் யாதவ்
- தீபக் ஹூடா
- வாஷிங்டன் சுந்தர்
- ஷர்துல் தாக்கூர்
- யுஸ்வேந்திர சாஹல்
- பிரசித் கிருஷ்ணா
- முகமது. சிராஜ்
வெஸ்ட் இண்டீஸ் அணி பிளேயிங் லெவன்,
- ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்)
- பிராண்டன் கிங்
- டேரன் பிராவோ
- ஷமர் ப்ரூக்ஸ்
- நிக்கோலஸ் பூரன்(கேப்டன்)
- ஜேசன் ஹோல்டர்
- ஒடியன் ஸ்மித்
- அக்கேல் ஹோசைன்
- ஃபேபியன் ஆலன்
- அல்ஸாரி ஜோசப்
- கெமர் ரோச்