முதல்முறையாக... உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த முன்னாள் சாம்பியன்
இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து அதிர்ச்சியளித்துள்ளது முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி.
ஒருநாள் உலகக்கோப்பை
இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிசுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 6 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் துடுப்பாட்டம் செய்ய களம் இறங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்
இதையடுத்து 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. இதில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதே வேளை தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |