வெஸ்ட் இண்டீஸ் தொடர்! இந்திய கிரிக்கெட் அணியில் 2 தமிழக வீரர்கள்... யார் அவர்கள்?
வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு இளம் தமிழக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான், ஆர். சாய் கிஷோர் ஆகியோர் இருப்பு (reserves) வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் நிலையில், அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களுக்கு பாசிட்டிவ் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக தமிழக அணியின் நட்சத்திர வீரர்களாக திகழும் இருவரையும் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக சாய் கிஷோர் இடம் பிடித்திருந்தார். அதற்பின் தற்போது அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.