15.2 ஓவரிலே 134 ரன் எடுத்து வெற்றி! வெளியேறியது நேபாளம்..மிரள வைத்த மேற்கிந்திய தீவுகள்
நேபாள அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகள் இமாலய வெற்றி பெற்றது.
ஐரி 58 ஓட்டங்கள்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கிண்ணப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய நேபாளம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
திபேந்திர சிங் ஐரி (Dipendra Singh Airee) 58 (47) ஓட்டங்களும், சோம்பல் காமி 26 (15) ஓட்டங்களும் எடுத்தனர். ஜேஸன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரண்டன் கிங் 22 (17) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் வெற்றிக் கூட்டணி அமைத்தனர்.

ஹோப் விளாசல்
ஷாய் ஹோப் (Shai Hope) 44 பந்துகளில் 61 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்), ஷிம்ரான் ஹெட்மையர் 32 பந்துகளில் 46 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினர்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் 15.2 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
தோல்வியுற்ற நேபாள அணி C குழுவில் முதல் அணியாக வெளியேறியது. 17ஆம் திகதி ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் நேபாளம் விளையாட உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |