டி20 உலகக்கிண்ணம்: 83 ரன்னுக்கு 7 விக்கெட்..177 ரன் இலக்கு நிர்ணயித்த மே.தீவுகள்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 176 ஓட்டங்கள் குவித்தது.
விக்கெட் வீழ்ச்சி
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாடியது.

ஷாய் ஹோப், பிரண்டன் கிங் இருவரும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்க மேற்கிந்திய தீவுகள் 14 பந்துகளில் 29 ஓட்டங்கள் குவித்தது. ஆனால் ஹோப் 16 (6) ஓட்டங்களில் வெளியேற, ஹெட்மையர் 2 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
பின்னர் பிரண்டன் கிங் 21 (11) ஓட்டங்களில் ஆட்டமிழக்க மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. சேஸ், ரூதர்போர்ட், பௌல் ஆகியோர் சொதப்ப மேற்கிந்திய தீவுகள் 83 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஹோல்டர், ஷெப்பர்ட் அதிரடி
இதனால் 100 ஓட்டங்களை அணி தாண்டுமா என்ற கேள்வி எழ, ஜேசன் ஹோல்டர் (Jason Holder) மற்றும் ரோமரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd) கூட்டணி சிக்ஸர்களை பறக்கவிட்டு ஜெட் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியது.

இருவரின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களில் 176 ஓட்டங்கள் குவித்தது. ஷெப்பர்ட் 37 பந்துகளில் 52 ஓட்டங்களும் (4 சிக்ஸர், 3 பவுண்டரிகள்), ஹோல்டர் 31 பந்துகளில் 49 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினர்.
தென் ஆப்பிரிக்காவின் தரப்பில் இங்கிடி 3 விக்கெட்டுகளும், ரபாடா மற்றும் போஷ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |