இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட்: மேற்கிந்திய தீவு அணி வெற்றி.!
இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவு 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து ஒரு ஓட்டம் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.
இந்நிலையில், 3-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய மேற்கிந்திய தீவு அணியின் ரோவ்மன் பவல் சதம் அடித்தார்.அவர் 53 பந்துகளில் 107 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மேலும் நிக்கோலஸ் பூரன் சிறப்பாக விளையாடி 43 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 225 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் பேன்டன் 73 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்றது.
West Indies beat England by 20 runs thanks to a brilliant century by Rovman Powell.
— ICC (@ICC) January 27, 2022
The hosts lead the T20I series 2-1 ?#WIvENG pic.twitter.com/cNG2JO51aI