கடவுளுக்கு நன்றி! நான் தப்பித்துவிட்டேன்: கிரிக்கெட் வீரர் பகிர்ந்த புகைப்படம்
மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷுவா டா சில்வா தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி முழுமையாக கைப்பற்றியது.
கடைசி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷுவா டா சில்வா, மொத்தம் 35 ஓட்டங்களுடன் 4 கேட்ச்சுகளை பிடித்தார்.
முன்னதாக அவர் விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்தபோது, பந்துவீச்சாளர் வீசிய பந்து ஒன்று அவரை தாக்கும் வகையில் வந்தது. ஆனால் ஜோஷுவா சுதாரித்துக் கொண்டு அடிபடாமல் தப்பினார்.
இந்த புகைப்படத்தை மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதனுடன் தேநீர் இடைவெளியின் கடைசி அமர்வில் நடந்தது, இந்த புகைப்படத்திற்கு என்ன தலைப்பு கொடுப்பீர்கள் என்று கேட்டிருந்தது.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜோஷுவா, நான் தப்பித்ததற்கு கடவுளுக்கு நன்றி என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
Thank god I’m alive ? https://t.co/0i8Fktp8HS
— Joshua Da Silva (@joshuadasilva08) June 26, 2022
PC: Getty Images