மொத்தம் 800 ஓட்டங்கள் குவித்தும் டிரா: தொடரை இழந்த இலங்கை
இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இரண்டாவது டெஸ்ட்
ஆன்டிகுவா மைதானத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நடந்தது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 549 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 499 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தினேஷ் சண்டிமல் 71 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 34 ஓட்டங்களும் எடுத்தனர். 302 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை மேற்கிந்திய தீவுகள் தொடங்கியது.
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன்
கடைசி நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 109 ஓட்டங்கள் எடுத்தது. ஜான் காம்ப்பெல் 51 ஓட்டங்களும், பிரண்டன் கிங் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.
போட்டி டிராவில் முடிய, மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |