மேற்கிந்திய தீவுகளை தவிடுபொடியாக்கிய இலங்கை மகளிர் படை! முதல் போட்டியில் இமாலய வெற்றி
மகளிர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் ஒருநாள் போட்டி
ஹம்பன்டோடாவில் மகளிர் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ரஷாடா வில்லியம்ஸ் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஷெமைனே காம்ப்பெல், ஹேலே மேத்யூஸ் கூட்டணி 68 ஓட்டங்கள் குவித்தது. ஹேலே மேத்யூஸ் 38 (53) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சுகந்திகா குமாரி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அவரது தொடர்ந்து ஷெமைனே காம்ப்பெல் 27 ஓட்டங்கள் எடுத்தும், ஸ்டாஃபாணி டெய்லர் 33 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீராங்கனைகள் இலங்கையின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
Sugandika Kumari and Kavisha Dilhari led a ? bowling attack, restricting the Windies to 195! Time to chase this down, girls! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 15, 2024
? LIVE | https://t.co/b9QqJbMwky #SLvWI #WomensCricket pic.twitter.com/MqEv2RRU5N
ஹர்ஷிதா 44
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 47.1 ஓவரில் 195 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. சுகந்திகா குமாரி மற்றும் கவிஷா டில்ஹாரி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். \
பின்னர் துடுப்பாடிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 40 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து அணித்தலைவர் சமரி அதப்பத்து 38 ஓட்டங்கள் எடுத்தார்.
ஹர்ஷிதா ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா 43 ஓட்டங்களும் விளாசினர். இதன்மூலம் இலங்கை அணி 34.1 ஓவரில் 198 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி காலேவில் 18ஆம் திகதி நடைபெற உள்ளது.
A resounding victory to kick off the series! ???
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 15, 2024
Our Lionesses roared to a dominant 6-wicket win over the West Indies in the first ODI. A fantastic all-round performance from the team! ?? #SLvWI #WomensCricket #LionessesRoar pic.twitter.com/HrYgUBQxcc
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |