சரணடைந்த இந்திய அணி! 2வது டி20ல் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி... வீரர்கள் கொண்டாட்ட வீடியோ
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி இந்திய அணியின் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ரோகித் சர்மா முதல் பந்திலே கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 11 (6) ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 10 (11) ரன்களும், ரிஷப் பண்ட் 24 (12) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 31 (31) ரன்களும், ஜடேஜா 27 (30) ரன்களும், தினேஷ் கார்த்திக் 7 ரன்களும், அஷ்வின் 10 ரன்களும், புவனேஷ்வர் குமார் 1 ரன்னும், அவேஷ் கான் 8 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் 19.4 ஒவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஒபேட் மெக்காய் 6 விக்கெட்டுகளும், ஹொல்டர் 2 விக்கெட்டுகளும், ஜோசப் மற்றும் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராண்டன் கிங் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் கெய்ல் மேயர்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Watch as the #MenInMaroon celebrate clinching victory in the second match of the @goldmedalindia T20 Cup, presented by Kent Water Purifiers #WIvIND ?? pic.twitter.com/UV5Sl2zfAc
— Windies Cricket (@windiescricket) August 1, 2022
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நிகோலஸ் பூரன் 14 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 6 ரன்களில் ஜடேஜாவிடன் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய பிராண்டன் கிங்ஸ் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 68 (52) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ரோவ்மேன் பவல் 5 ரன்களில் வெளியேறினார்.
முடிவில் அதிரடி காட்டிய தேவான் தாமஸ் 31 (19) ரன்களும், ஒடேன் சுமித் 4 (4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#TeamIndia put up a solid fight but it was the West Indies who won the second #WIvIND T20I.
— BCCI (@BCCI) August 1, 2022
We will look to bounce back in the third T20I. ? ?
Scorecard ? https://t.co/C7ggEOTWOe pic.twitter.com/OnWLKEBiov