கடைசி போட்டியில் இலங்கையை ஊதி தள்ளி டி-20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்!
இலங்கை எதிரான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று மேற்கிந்திய தீவுகள் தொரை கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
3 போட்டிகள் கொண்ட டி-20 1-1 என்ற வெற்றி கணக்கில் சமனில் இருந்த நிலையில் மார்ச் 8ம் திகதி இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி Antigua-வில் உள்ள Coolidge மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக இலங்கை வீரர் தினேஷ் சந்திமால் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்கள் எடுத்தார்.
132 ஓட்டங்ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் டி-20 தொடரை 2-1 என மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி மார்ச் 10ம் திகதி Antigua-வில் உள்ள சர் விவ்யன் ரிச்சட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Cometh the hour..cometh the man! In one stroke Fabian Allen seals the series victory for the #MenInMaroon #WIvSL pic.twitter.com/ffFkNliIF6
— Windies Cricket (@windiescricket) March 8, 2021