மேற்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு: 40 வயதுடைய நபர் உயிரிழப்பு: காவல்துறை விசாரணை
West London Memorial Shooting One Man Dead: மேற்கு லண்டனில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரித்தானியாவில் துப்பாக்கி சூடு
மேற்கு லண்டனின் ஆக்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 7.45 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 40 வயது லெவி டேவிட்சன் மார்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு காயம் காரணமாக உயிரிழந்தார்.
மேற்கு லண்டனில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் இந்த திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டு நினைவஞ்சலியில் பங்கேற்ற பொதுமக்கள் பலரும் அங்கிருந்து ஓடியதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குண்டு தாக்கி காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக லண்டன் அவசர கால ஊர்தி பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகள் தொடர்பான காட்சிகள், மற்றும் புகைப்படங்கள் அல்லது தகவல்கள் ஏதேனும் யாரேனும் வைத்திருந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.