மேற்கு லண்டன் நாட்டிங் ஹில் திருவிழா: குற்றச்செயலில் ஈடுபட்ட 249 பேர் கைது!
பிரித்தானியாவில் நடைபெற்ற நாட்டிங் ஹில் திருவிழாவில் இதுவரை 249 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டிங் ஹில் திருவிழா
மேற்கு லண்டனில் நடைபெறும் நாட்டிங் ஹில் திருவிழா இதுவரை 4 பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாட்டிங் ஹில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை 3 கத்திக்குத்து தாக்குதலும், திங்கட்கிழமை 1 கத்திக்குத்து தாக்குதலும் அரங்கேறியுள்ளது.
இதில் குழந்தைகளுடன் கலந்து கொண்ட தாய் ஒருவர் மோசமான உடல் நிலையுடன் சிகிச்சை பெற்று வருவதாக மெட் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
249 பேர் கைது
இரண்டு நாள் நடைபெற்ற திருவிழாவில் இதுவரை மொத்தமாக 249 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் வழங்கிய தகவலின் படி, திங்கட்கிழமை 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தது, போதைப்பொருள் குற்றங்கள் ஆகியவற்றிற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 16 பேர் அவசர சேவை குழுவை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 பேர் பாலியல் குற்றத்திற்காகவும், ஒருவர் துப்பாக்கி வைத்து இருந்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியை தவிர்த்து 41 ஆயுதங்களை பொலிஸார் திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். இக்கட்டான நிலையை சமாளிப்பதற்காக ஆயிரக்கணக்கான பொலிசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |