மேற்கு லண்டனில் தந்தை, மகள் மீது துப்பாக்கி சூடு: 32 வயது இளைஞர் கைது
பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் துப்பாக்கி சூடு
ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்கு லண்டனில் நடந்த இரட்டை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், சந்தேக நபரான 32 வயது மனிதர் ஒருவர் கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாட்ப்ரோக் குரோவ்(Ladbroke Grove) பகுதியின் தெற்கு வரிசையில் மாலை 5:30 மணிக்கு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.
இதில், 8 வயது சிறுமி மற்றும் அவரது 34 வயது தந்தை இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தனர்.
சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், அவரது தந்தைக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
32 வயது நபர் கைது
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கென்சிங்டனைச் சேர்ந்த 32 வயதான ஜாஸ் ரீட் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை முயற்சி மற்றும் துப்பாக்கி, வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ பொலிட்டன் பொலிஸின் சிறப்பு குற்றப்பிரிவு இந்த வழக்கை விசாரணையை நடத்தி வருகிறது.
சந்தேக நபர் தாமஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |