மேற்கு லண்டனில் துப்பாக்கி சூடு: 8 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 22 வயது நபர் கைது
மேற்கு லண்டனில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் துப்பாக்கி சூடு
பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி மற்றும் ஒரு ஆண் படுகாயமடைந்த நிலையில், 22 வயது நபர் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் லாட்பிரோக் குரோவ்-இல்(Ladbroke Grove.) உள்ள தெற்கு வரிசையில் இந்த சம்பவம் நடந்தது.

2 வயது குழந்தையுடன் சிலர் வாகனத்தில் இருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
8 வயது சிறுமி காயத்தின் தீவிரத்தால் அறுவை சிகிச்சைக்குப் உட்படுத்தப்பட்டார், பின்னர் தற்போது நிலையான நிலையில் உள்ளார்.
இவர்களுடன் 34 வயது ஆண் ஒருவர் பலத்த படுகாயமடைந்துள்ளார்.
வாகனத்தில் இருந்த 32 வயது பெண் ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும் அவரும், இரண்டு வயது குழந்தையும் காயமடையவில்லை.
இளைஞர் கைது
இந்த சம்பவத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் 22 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        