பிரித்தானியாவில் குழந்தையை கொல்ல முயற்சி: குற்றத்தை ஒப்புக் கொண்ட இளைஞர்!
குழந்தையை கொலை செய்ய முயற்சித்ததை மேற்கு வேல்ஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
குழந்தை கொல்ல முயற்சி
மேற்கு வேல்ஸில் உள்ள செரிடிஜியனை(Ceredigion) பகுதியை சேர்ந்த 28 வயது நபர் ஒருவர், குழந்தை கொலை முயற்சி குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ரைடியன் ஜேமிசன்(Rhydian Jamieson) வியாழக்கிழமை ஸ்வான்சீ கிரவுன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சட்டப்படி பெயர் வெளியிட முடியாத அந்த இளம் குழந்தைக்கு தீங்கு விளைவித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, நீதிபதி பால் தாமஸ் கேசி, ஜேமிசனை மே 27 ஆம் திகதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை
ஜனவரி 15 ஆம் திகதி இரவு 10:15 மணிக்கு சற்று முன்பு செரிடிஜியனில் உள்ள ஒய் ஃபெர்விக் என்ற இடத்தில் குழந்தையின் நலன் குறித்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து Dyfed-Powys போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |