வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்துபவரா? நிச்சயம் இதை கவனியுங்கள்
பெரும்பாலான வீடுகளில் தற்போது வெஸ்டன் டாய்லட் தான் பயன்படுத்தப்படுகிறது.
அதனை முறையாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை. வெஸ்டன் டாய்லெட்டைப் பயன்படுத்திய பிறகு, அதனை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு, சில நிமிட இடைவெளிகளில் டாய்லெட் சீட்டினை மூடி வைத்து அதன் பிறகு ஃப்ளஷ் செய்ய வேண்டும்.
தண்ணீரை ஃப்ளஷ் செய்யும்போதும் மூடிவைக்காவிட்டால், அதிலிருந்து வெளியேறும் கிருமிகளும், மலம் கலந்த அசுத்த நீரும் கழிவறையின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த நுண்கிருமிகள் கழிவறையிலுள்ள தரை விரிப்புகள், திரைச்சீலைகள் மற்றும் அங்கு நாம் வைத்திருக்கக்கூடிய டூத் ப்ரஷ்கள், துண்டு போன்ற பிற பொருட்களின் மீதும் படிகிறது.
homeaffluence
இப்படி அசுத்த நிலையில் உள்ள கழிவறையையும், அங்குள்ள மற்ற பொருட்களையும் பயன்படுத்திவிட்டு வெளியேறும்போது நமது கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகளின் மூலமும் கழிவறையிலுள்ள கிருமிகள் ஒட்டிக் கொள்கிறது.
இதனால் வீட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ள நபர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, வெஸ்டன் டாய்லெட்டின் மீதுள்ள மூடியை சரியான முறையில் மூடி வைப்பதன் மூலமும், மூடிவைத்த பிறகு ஃப்ளஷ் செய்வதன் மூலமும் கிருமி பரவுவதை தடுக்கலாம் என்பதை மறவாதீர்கள்.