லண்டனில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து! பொலிஸ் வாகனங்கள் குவிந்ததால் மக்கள் பதட்டம்
பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் Stratford-ல் உள்ள Westfield Stratford சிட்டி வணிக வளாகத்திலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வணிக வளாகத்தில் நடுத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீ விபத்தை தொடர்ந்து வணிக வளாகத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Like 20 minutes ago, we are outside without news pic.twitter.com/H1qOx0xSmL
— Raúl????⚖️ (@rauldmngz) October 17, 2021
தீ விபத்து காரணமாக வணிக வளாகத்தை சுற்றி பொலிஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் குவிந்ததாலும் மற்றும் வானில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதால் அங்கிருந்து மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வணிக வளாகத்திற்குள் இருப்பவர்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ள பொலிசார், பொதுமக்கள் யாரும் நுழையாத படி வளாத்தை மூடியுள்ளனர்.
We are supporting @LondonFire with evacuation of the #Westfield Shopping Centre in #Stratford following reports of a fire.
— Newham MPS | North East BCU (@MPSNewham) October 17, 2021
மேலும், வளாகத்தின் நடுத்தளத்தில் புகை சூழ்ந்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் சுமார் 60 தீணையப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதனால் தீ ஏற்பட்டது என்பது தொடர்பான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. அதேசமயம், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Smoke from around the time it started idk about the situation now pic.twitter.com/dGedMzhvGb
— Berkay (@81747381bs) October 17, 2021
A lot of firefighters and access to Westfield Stratford closed. There’s an helicopter now. pic.twitter.com/QleGOqpvxt
— Clément Gonzalvez (@ClementGzl) October 17, 2021