பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் வாயிலில் பரபரப்பு சம்பவம்: வாகன சாரதி ஒருவர் அதிரடி கைது
பிரித்தானிய பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தின் வாயிலில் வாகனத்தை மோதிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ இல்லத்தின் வாயிலில்
பிரித்தானிய பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தின் பிரபலமான வாயிலில் உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
Credit: The Sun
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என உறுதி செய்துள்ள ஸ்காட்லாந்து யார்டு, ஆனால் ஒரு நபர் குற்றமிழைக்கும் வகையில் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டுதல் ஆகிய இரண்டிலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து பொலிஸ் அதிகாரிகள் வெஸ்ட்மின்ஸ்டரில் கிட்டத்தட்ட முழு சாலையையும் மூடிவிட்டனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை தீவிர சோதனைக்கும் உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Credit: The Sun
வெடிகுண்டு தாக்குதலுக்கும் இலக்கானது
சம்பவம் நடந்த போது பிரிதமர் ரிஷி சுனக் பணியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது. மட்டுமின்றி Downing Street பகுதியானது 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வரும் பகுதியில் ஒன்று.
இதற்கு முன்னரும் பிரித்தானிய பிரதமர் இல்லம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சர் ஜான் மேஜர் பிரதமார இருந்த போது வெடிகுண்டு தாக்குதலுக்கும் இலக்கானது.
முன்னதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை மீது இந்திய இளைஞர் ஒருவர் லொறியுடன் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரித்தானிய பிரதமர் இல்லம் மீது வாகனத்தை மோதவிட்டு தாக்குதலுக்கு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.