மீனவரை விழுங்கிய திமிங்கலம்: பின்னர் நிகழ்ந்த ஆச்சரியம்
அமெரிக்கர் ஒருவர் மீன் பிடிப்பதற்காக கடலில் குதித்த நிலையில், திடீரென தான் திமிங்கலம் ஒன்றின் வாய்க்குள் இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.
மீனவரை விழுங்கிய திமிங்கலம்
அமெரிக்காவின் Massachusetts என்னுமிடத்தில், லாப்ஸ்டர்களை பிடிப்பதற்காக கடலில் குதித்தார் Michael Packard (58).
Image: FaceBook
திடீரென தன்னை ஏதோ மோத, கண் விழித்தபோது, தன்னைச் சுற்றிலும் இருளாக இருப்பதை உணர்ந்த மைக்கேல், தான் ஒரு திமிங்கலத்தின் வாய்க்குள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
மரண பயம் பிடிக்க, தன் குடும்பத்தினர் நினைவு வரவே, எப்படியாவது தப்பவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த திமிங்கலத்தின் வாய்க்குள் ஓங்கி ஓங்கி மிதிக்கத் துவங்கியுள்ளார் மைக்கேல்.
Image: Getty Images/iStockphoto
அடுத்து நிகழ்ந்த ஆச்சரியம்
வேகமாக தன் தலையை அசைக்கத் துவங்கிய அந்த திமிங்கலம், சில விநாடிகளுக்குள் மைக்கேலை வெளியே துப்பிவிட்டது. கண்ணில் வெளிச்சம் படவே, தான் மீன் வாயிலிருந்து வெளியே வந்துவிட்டதை அறிந்துகொண்டுள்ளார் மைக்கேல்.
அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள், ஒரு திமிங்கலம் நீர்ப்பரப்புக்கு வந்ததையும், மைக்கேல் தண்ணீரில் நீந்திக்கொண்டிருப்பதையும் கண்டு அவரை மீட்டு படகில் ஏற்றியுள்ளார்.
உடலின் சதைப்பகுதி மட்டும் பாதிக்கப்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேல் மூன்று வாரங்களில் மீண்டும் லாப்ஸ்டர் பிடிக்க வேலைக்குத் திரும்பிவிட்டார்.
விடயம் என்னவென்றால், திமிங்கலங்கள் உணவு உட்கொள்ளும்போது வாயைத் திறந்து பெரும் அளவிலான தண்ணீரை வாய்க்குள் எடுத்துக்கொள்ளும்.
அப்படி திமிங்கலம் வாயைத் திறக்கும்போது அதன் கண்கள் மூடிவிடும் என்பதால், திமிங்கலத்தால் பார்க்கமுடியாது. அப்படித்தான் மைக்கேலை அந்த திமிங்கலம் விழுங்கிவிட்டிருக்கிறது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |