ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல்

By Balamanuvelan Mar 27, 2026 09:50 AM GMT
Report

பல ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் ஒன்று ஜேர்மன் கடற்கரை ஒன்றில் ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்ட விடயம் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு கவலையை உருவாக்கியது.

ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்

திங்கட்கிழமையன்று, ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Niendorf என்னுமிடத்திலுள்ள கடற்கரையில், humpback whale வகை திமிங்கலம் ஒன்று ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ளதை மக்கள் கவனித்துள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், அதன் உடலில் சுற்றியிருந்த வலையை அறுத்தெறிந்துள்ளனர்.

ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல் | Whale Swims To Freedom Stranded On German BeachUlrich Perrey/dpa/picture alliance

பின் மெல்ல அதன் தலைப்பகுதியை கடலை நோக்கித் திருப்பி, அது எப்படியாவது கடலை நோக்கி நீந்திச் சென்றுவிடுமா என அவர்கள் காத்திருக்க, அந்த திமிங்கலமோ மீண்டும் கரையைப் பார்த்து திரும்பியுள்ளது.

32 அடி நீளமுடைய, பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த திமிங்கலத்தை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாது, ஏனென்றால், அப்படிச் செய்வது அதற்கு காயத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், மீட்புக் குழுவினர், அந்த திமிங்கலத்தின் அருகில் வேகமாக படகுகளை செலுத்துவதன் மூலம் அலைகளை உருவாக்குவது முதலான பல்வேறு விடயங்கள் மூலம் அதை கடலுக்குள் திருப்பி அனுப்ப முயன்றுவந்தார்கள்.

ஆனால், அதனால் பலன் எதுவும் கிடைக்காததால் மீட்புக்குழுவினர் கவலையடைந்தார்கள். 

சமீபத்திய தகவல்

இந்நிலையில், நேற்று, பெரிய இயந்திரங்கள் மூலம், கடற்கரையிலிருந்து கடலுக்குள் செல்லும் ஒரு வாய்க்காலை உருவாக்கினார்கள் மீட்புக் குழுவினர்.

ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல் | Whale Swims To Freedom Stranded On German BeachKai Moorschlatt/dpa/picture alliance

அதைத் தொடர்ந்து, ஆச்சரியமளிக்கும் வகையில், அந்த திமிங்கலம் மெல்ல அந்த வாய்க்கால் வழியாக நகரத் துவங்கியுள்ளது. 

இன்று காலை நிலவரப்படி, அந்த திமிங்கலம், Lübeck வளைகுடா பகுதியில் நீந்திக்கொண்டிருந்துள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த திமிங்கலம், டென்மார்க் தீவுகளைக் கடந்து, வடகடல் வழியாக பயணித்து, இறுதியாக அட்லாண்டிக் பெருங்கடலைச் சென்றடையவேண்டும்! 

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US