பிரித்தானிய கடற்கரையில் கொத்தாக கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்கள்: தெரியவந்த காரணம்
ஸ்கொட்லாந்து தீவு கடற்கரையில் கொத்தாக கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்கள் பல மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரை ஒதுங்கிய திமிங்கலங்களில்
ஞாயிறு பகல் 7 மணியளவில் Traigh Mhor கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் 55 எண்ணிக்கையில் இறந்ததாகவும், வெறும் 15 மட்டும் உயிருடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
@twitter
பொதுமக்கள் அந்த திமிங்கலங்களை நெருங்க வேண்டாம் என பொலிசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளணர். இதனிடையே, மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
மட்டுமின்றி மருத்துவ குழுவினரும் சம்பவயிடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தெரிவிக்கையில் திமிங்கலங்களில் ஒன்று பெண்ணுறுப்பு பாதிப்பு ஏற்பட்டது போல் காணப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
@bbc
இந்த ஒரு பெண் திமிங்கலம் காரணமாக ஒரு கூட்டமே கரை ஒதுங்கியதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாகவே பைலட் திமிங்கலங்களில் ஒன்று சிக்கலில் அகப்பட்டால், அல்லது கரை ஒதுங்க நேர்ந்தால், அதனை பின் தொடர்ந்து பல எண்ணிக்கையிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கும் என கூறுகின்றனர்.
பொதுமக்கள் கட்டாயம் அந்த பகுதியை தவிர்க்க வேண்டும் எனவும், திமிங்கலங்கள் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
@bbc
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |