என்ன ஒரு மேட்ச்... ஒரே பதட்டமா இருந்தது! இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய கேன் வில்லியம்சன்
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியை, நியூசிலாந்து அணி வீரர் கானே வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.
இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித தொடர்களில் விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது.
குறிப்பாக டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி Brisbaneல் நடைபெற்றது. இந்த மைதானத்தில், அவுஸ்திரேலியாவை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அணியும் வீழ்த்தியது இல்லை.
அப்படி ஒரு நிலையில், இந்தியா அணி, இளம் வீரர்களை வைத்து வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது.
இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியை முன்னணி வீரர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், நியூசிலாந்து அணி வீரரான கானே வில்லியம்சன், அவுஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே சென்று வீழ்த்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.
இந்திய அணியின் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பல வீரர்கள் விளையாட முடியாமல் கூட போனது, இருப்பினும், இந்திய அணியின் இளம் வீரர்களின் பட்டாளம் அவுஸ்திரேலியா அணியை வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மறக்க முடியாத ஒன்றாகும், இந்திய அணியின் பந்து வீச்சு மிக சிறப்பாக இருந்தது, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் பதட்டமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார்.

