இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்?

Indian Cricket Team Pakistan national cricket team International Cricket Council T20 World Cup 2026
By Karthikraja Feb 02, 2026 06:22 AM GMT
Report

இந்தியாவிற்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதால், பாகிஸ்தானுக்கு ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

இந்தியா போட்டி புறக்கணிப்பு

2026 ஐசிசி T20 உலகக்கிண்ண தொடர், பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. 

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்? | What Affecst If Pakistan Refuse To Play Vs India

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி T20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் இந்த நடவடிக்கையை கண்டித்து, உலகக்கிண்ண தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் திட்டமிட்டது. 

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்? | What Affecst If Pakistan Refuse To Play Vs India

தற்போது உலககிண்ணதொடரில் பாகிஸ்தான் பங்குபெறும், ஆனால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான லீக் போட்டி, பிப்ரவரி 15 ஆம் திகதி கொழும்புவில் நடைபெற உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஐசிசி அறிக்கை

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசி, "2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கிண்ண தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசால் எடுக்கப்பட்ட முடிவை ஐசிசி கவனத்தில் கொண்டுள்ளது. 

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்? | What Affecst If Pakistan Refuse To Play Vs India

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம். உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் அனைத்து தகுதி பெற்ற அணிகளும் அட்டவணைப்படி சமமாக போட்டியிட வேண்டும் என்ற அடிப்படை கொள்கையுடன், இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு பொருந்தாததாக உள்ளது.

இந்த முடிவு, பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட் சூழலுக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, PCB இதனை மீண்டும் பரிசீலிக்கும் என ஐசிசி நம்புகிறது" என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு ஏற்படும் விளைவுகள்

ஐசிசி விதிப்படி, பாகிஸ்தான் இந்தியா உடனான போட்டியை புறக்கணித்தால், அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதாக கருதி 2 புள்ளிகள் வழங்கப்படும். இது பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கலை ஏற்படுத்தும். 

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்? | What Affecst If Pakistan Refuse To Play Vs India

பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல மீதமுள்ள 3 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலை வரும்.

மேலும், அரை இறுதி அல்லது இறுதிப்போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் மோத வேண்டிய சூழல் வந்தால், அந்த போட்டிகளையும் பாகிஸ்தான் புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே போல், இந்த போட்டியை புறக்கணிப்பதன் மூலம் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் என கருதப்படுகிறது.

உலகளவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு உலகளவில் பெரும் ரசிகர்கள் உண்டு.

இந்தப் போட்டியை நம்பி, தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள், விளம்பரதாரர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். 

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்? | What Affecst If Pakistan Refuse To Play Vs India

இந்தியா பாகிஸ்தான் போட்டி இடையே ஒளிபரப்படும் விளம்பரங்களுக்காண விலை 10 வினாடிகளுக்கு ரூ.25-40 லட்சமாக இருக்கும்.

இந்த போட்டியை புறக்கணிப்பதன் மூலம், ஏற்படும் நஷ்டத்திற்காக, விளம்பரதாரர்கள் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஐசிசி மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரலாம்.

அந்த நஷ்ட ஈடு தொகையை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து வசூலிக்க ஐசிசி நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும், ஒப்பந்தத்தை மீறி போட்டியை புறக்கணிப்பதால், பெரும் தொகையை அபராதம் விதிக்காலம்.

இது மட்டுமல்லாது, ஐசிசி தொடரில் பங்கேற்பு மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்த ஐசிசி வழங்கி வரும் உதவித்தொகையை நிறுத்தவும் வாய்ப்புள்ளது. 

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்? | What Affecst If Pakistan Refuse To Play Vs India

ஐசிசி வருவாயில் இருந்து வழங்கப்படும் 34.5 மில்லியன் டொலர் நிறுத்தப்படலாம். 

அதேபோல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் PSL தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க ஐஐசி NOC வழங்க மறுக்கும்.

அதிகபட்சமாக எதிர்வரும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்பதை கூட தடை செய்ய வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானின் முடிவு குறித்து விவாதிக்க, ஐசிசி 48 மணி நேரத்தில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்த உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US