அம்பானி முதல் ஷாருக்கான் வரை.., இந்திய பிரபலங்கள் வைத்திருக்கும் தனியார் ஜெட் விமானங்கள் என்னென்ன?
இந்திய பிரபலங்களுக்கு சொந்தமான தனியார் ஜெட் விமானங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி உலகின் மிக ஆடம்பரமான தனியார் ஜெட் விமானங்களில் ஒன்றான போயிங் 737 மேக்ஸ் 9 -யை சொந்தமாக வைத்துள்ளார்.
இந்த விமானத்தில் படுக்கையறை, லிவிங் ரூம் மற்றும் சமையலறை ஆகிய வசதிகள் உள்ளன. இதன் மதிப்பு 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மீனவ படகுகளில் த.வெ.க என்று குறிப்பிட்டிருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? முதலமைச்சருக்கு விஜய் காட்டம்
விஜய் மல்லையா
ஏர்பஸ் A319 என்ற விமானத்தை விஜய் மல்லையா வைத்திருக்கிறார். இதில், பார், உணவருந்தும் இடம் மற்றும் ஆடம்பரமான படுக்கையறை ஆகிய வசதிகள் உள்ளன. இந்த விமானமானது 6,850 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.
லட்சுமி மிட்டல்
கல்ஃப்ஸ்ட்ரீம் G650ER விமானத்தை லட்சுமி மிட்டல் வைத்திருக்கிறார் இந்த விமானத்தால் 13,890 கிலோமீட்டர்கள் இடைவிடாமல் பறக்க முடியும். இது வேகமாக பறக்கும் ஜெட் விமானங்களில் ஒன்றாகும்.
ஆதார் பூனவல்லா
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனவல்லா, கல்ஃப்ஸ்ட்ரீம் G550 விமானத்தை வைத்திருக்கிறார். இந்த விமானமானது 12,501 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.
அமிதாப் பச்சன்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பாம்பார்டியர் சேலஞ்சர் 300 என்ற விமானத்தை வைத்திருக்கிறார். இந்த விமானமானது 5,741 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.
ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் Gulfstream G550 என்ற விமானத்தை வைத்திருக்கிறார். இந்த விமானமானது 12,501 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |