தூங்கும் போது தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?
தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கும் வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்றில் இருந்து நான்கு லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.
உடல் செயல்முறை சீராக இருக்க போதுமான தண்ணீர் தேவை. இந்நிலையில் இரவு தூங்கும் போது தண்ணீர் குடிக்கலாமா? அது ஆரோக்கியமானதா என்பது குறித்து பார்க்கலாம்.
படுக்கைக்கு செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெதுவெதுப்பான நீர் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. வியர்வை வெளியீட்டை அதிகரிக்கிறது.
இரவு நேரத்தில் வியர்வை திரவத்தை இழக்க செய்யும். ஆனால் அது உடலில் இருக்கும் அதிகப்படியான உப்புகள் அல்லது நச்சுகளை நீக்கி சரும செல்களை சுத்தம் செய்ய உதவும்.
படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் உண்டு. ஆனால் படுப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடிப்பது தூக்க சுழற்சியில் குறுக்கிடுவதோடு இதய ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்.
நீரிழப்பை தவிர்ப்பதற்கும் இரவில் அதிகப்படியான நீர் உட்கொள்ளலை தடுப்பதற்கும் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
நீரேற்றமாக இருக்க பழங்கள், காய்கறிகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும். இதில் அதிக அளவு தண்ணீர் உள்ளது.
ஒவ்வொரு முறை உணவுக்கு முன்பும், உணவுக்கு பின்பும், பசியுடன் இருக்கும் போதும், உடற்பயிற்சிக்கு முன்பும் பின்னரும் தண்ணீர் குடிப்பது நல்லது.