நெல்லிக்காய் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா..?
நெல்லிக்காய் எண்ணற்ற நன்மைகளைக் கொண்ட ஒரு அற்புத கனியாகும்.
இதில் நிறைந்திருக்கும் விட்டமின் சி-யே உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுத்துவிடும். அதோடு இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் பொதுவான பிரச்னைகளையும் சரிசெய்ய உதவும்.
நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது நல்லது என்றாலும் இப்படி நெல்லிக்காய் பொடி செய்து அதை தினமும் தண்ணீரில் கலந்துகுடித்தால் இன்னும் நன்மைகள் அதிகம். இதை வீட்டிலேயே செய்யலாம்.
அதாவது நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் பொடியாக அரைத்து டப்பாவில் போட்டு வைத்துக் தினம் ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பலவகையான நன்மைகள் கிடைக்கும்.
அந்தவகையில் தற்போது அவை என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
- நெல்லிக்காயில் போதுமான அளவு அமினோ ஆசிட் இருக்கிறது. இது உடலின் மெட்டாபாலிசத்தை தூண்டுகிறது. இதனால் உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலை ஹெல்தியாக வைத்துக்கொள்ளும். நீங்கள் சாப்பிடும் முன் இந்த தண்ணீரை குடித்தால் நல்லது.
- நெல்லிக்காயில் க்ரோமியம் என்னும் பண்பு உள்ளது. இது இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் தேவைப்படும்போதெல்லாம் ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். குடிக்க முடிவு செய்தால் மருத்துவரிடம் குடிக்கலாமா என கேட்டுக்கொள்வது நல்லது.
- உங்களுக்கு செரிமானப்பிரச்னை இருந்தால் அதற்கும் நெல்லிக்காய் உதவும். எனவே தினம் சாப்பிடும் முன் காலையில் ஒரு கிளாஸ் குடிப்பதால் நாள் முழுவதும் செரிமான மண்டலங்கள் தூண்டப்பட்டு ஆற்றல் கிடைக்கும்.
- பருவகால தொற்று காரணமாக உண்டாகும் சளி, இருமலை சரி செய்ய நெல்லிக்காய் பொடி உதவும் எனவே தண்ணீருடன் இஞ்சி, தேன் கலந்து குடிப்பதால் சுவாசப்பாதை சீராகி சளி, இருமல் குணமாகலாம்.
- பருக்கள், திட்டுக்கள், வயதான சுருக்கங்கள், தெளிவற்ற முகம் போன்ற சருமப்பிரச்னைகள் இருந்தாலும் நெல்லிக்காய் தண்ணீர் உதவும். எனவே இதை தினம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அவை சரியாகலாம்.
குறிப்பு
வேறு ஏதேனும் உடல் நல பாதிப்புகள், மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர், கர்ப்பிணிகள் உங்கள் மருத்துவரிடம் இந்த நெல்லிக்காய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கலாமா என ஆலோசனை செய்துவிட்டு குடிங்கள்.