தினமும் பெண்கள் இந்த 5 உணவுகளை கட்டாயமாக சாப்பிட வேண்டுமாம்.. கண்டிப்பா தெரிஞ்சுகோங்க!
health tips
food chart
folic acid
By Logeswari
பெண்கள் எடுத்து கொள்ளும் தினசரி உணவுப் பட்டியலில் ஃபோலேட் நிறைந்த உணவுகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஃபோலேட் நிறைந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. வைட்டமின்களும் ஒன்று தான் ஃபோலேட்.
இதனை வைட்டமின் பி- 9 என்று அழைக்கிறோம். இது பெண்கள் தினமும் எடுத்து கொள்வதால் கருவின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க உதவும். சரி வாங்க ஃபோலேட் நிறைந்த உணவுகளை குறித்து பார்க்கலாம்.
ஃபோலேட் நிறைந்த உணவுகள்:-
- பொதுவாக பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகள், பழங்களில் ஆரோக்கியம் அதிகமுள்ளது. கீரையில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக அளவு ஊட்டச்சத்துகள் உள்ளது. ஒரு கப் கீரையில் ஒரு நாளைக்கு தேவையான 15 சதவீத போலிக் அமிலம் உள்ளது.
- பருப்பு வகையில் போலிக் அமிலம் உள்ளதால் தினமும் சமையலுக்கு பருப்பு வைகளை பயன்படுத்துவது நல்லது. பருப்பு வகைகள் அனைத்திலும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை இதய நோய்கள் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை தடுக்கும்.
- பீட்ரூட்டை சாப்பிட்டால் உயிரணு ஆரோக்கியம்,எலும்பு வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கிறது. இதில் நமக்கு 30 சதவீதம் போலிக் அமிலம் கிடைக்கும்.
- ப்ரோக்கோலியில் தினசரிக்கு தேவையான 21 சதவீத போலிக் அமிலம் உள்ளது. மேலும் இதில் உள்ள இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.
-
பாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகள் அவை இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும், உடலுக்குத் தேவையான ஆற்றல் அளவை அதிகரிக்கும் உதவும். இதிலிருந்து நமக்கு 18சதவீதம் போலிக் அமிலம் நிறைந்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US