இஞ்சியை எதனுடன் சாப்பிட்டால் பலன்கள் பெறலாம்? அவசியம் தெரிஞ்சிகோங்க
நம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் இஞ்சி.
இது ஆன்ட்டி ஃப்பன்ங்கள், ஆன்ட்டி செப்டிக், ஆன்ட்டி பயோடிக் மற்றும் ஆன்ட்டி வைரல் பண்புகளைக் கொண்டுள்ளது. மற்றும் இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளன. இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான், சோடியம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பீட்டா-கரோட்டின் போன்ற தாதுக்களும் உள்ளன, இவை அனைத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இஞ்சியின் முழுப்பயனை பெறவேண்டுமாயின் ஒரு சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. அந்தவகையில் இஞ்சியை எதனுடன் சாப்பிட்டால் பலன்களை பெறலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
- காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
- பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும்.
- இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
- இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
- இஞ்சியை சுட்டு உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
- இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
- இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
- இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
- காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
- பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.