நாம் காணும் கனவுகளுக்கான பலன்கள் என்னென்ன? தெரியுமா?
By Balamanuvelan
ஒரு கனவு என்பது தூக்கத்தின் சில கட்டங்களில் பொதுவாக மனதில் விருப்பமின்றி நிகழும் படங்கள், யோசனைகள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளின் தொடர்ச்சியாகும்.
மனிதர்கள் ஒரு இரவில் சுமார் இரண்டு மணிநேரம் கனவு காண்கிறார்கள், ஒவ்வொரு கனவும் சுமார் 5 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும், என ஆய்வுகள் கூறுகின்றன.
இருப்பினும் கனவு காண்பவர் கனவை இதை விட நீண்டதாக உணரலாம்.
சில கனவுகள் நமக்கு மகிழ்ச்சியை தரும் சில கனவுகள் நமக்கு துக்கத்தையே தரும்.
அவ்வாறாக நாம் காணும் ஒவ்வொரு கனவும் ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளன. கனவுகளையும் அதறகான அர்த்தங்களையும் இப்போது பார்ப்போம்.
இதுபோல கனவுகள் கண்டால் சுப நிகழ்வுகள் நடக்கும்!
- விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும்.
- வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும்.
- பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
திருமணம் நடைபெறும்!
- திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
- ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
- இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
கனவில் தெய்வங்கள்
- உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
- தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
- திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
- தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
- நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் பலன்!
- சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
- கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
- இறந்தவர் கனவில் வந்தாலே இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன்!
- ஆமை,மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், மனதிலே நிம்மதி பிறக்கும்.
- மயில்,வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
- கழுதை,குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
- வாத்து,குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.
- மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும்.
- மலத்தை கனவில் கண்டால் பண வரவு வரும்.
- மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.
கெட்ட கனவுகள்
- பசு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு நோய்கள் தாக்கும்.
- நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
- அடிபட்டு ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
- முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
- நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
- குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும்.
- சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை பீடிக்கும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US