பிரித்தானியாவில் அத்தியாவசியப் பொருட்களில் என்னென்ன விலை உயர்ந்துள்ளன? விலை குறைந்துள்ளவை எவை?
பிரித்தானியாவில், நவம்பர் மாத நிலவரப்படி, பணவீக்கம் 2.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பணவீக்கத்தால், எந்தெந்த பொருட்களின் விலை வேகமாக உயர்ந்துவருகிறது? எந்தெந்த பொருட்கள் விலை குறைந்துள்ளன என்று பார்க்கலாம்.
எந்தெந்த பொருட்களின் விலை வேகமாக உயர்ந்துவருகிறது?
உணவுப்பொருட்களின் விலைகள்தான் பெரிய அளவில் விலை உயர்ந்துவருகின்றன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, ஆலிவ் ஆயில் 28 சதவிகிதம் விலை அதிகரித்து, 7.22 பவுண்டுகளிலிருந்து 9.21பவுண்டுகளாகியுள்ளது.
Iceberg lettuceஇன் விலை 24 சதவிகிதம் அதிகரித்து 80 பென்ஸிலிருந்து 99 பென்ஸாக உயர்ந்துள்ளது.
பிளம்ஸ் விலை, 20 சதவிகிதம் அதிகரித்து, 2.91 பவுண்டுகளிலிருந்து 3.48 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
எந்தெந்த பொருட்கள் விலை குறைந்துள்ளன?
பருப்பு வகைகள் (390-420கிராம்), 12 சதவிகிதம் விலை குறைந்து, 76 பென்ஸிலிருந்து 67 பென்ஸாக ஆகியுள்ளது.
உறைய வைக்கப்பட்ட இறால் மீன், 9 சதவிகிதம் குறைந்து, கிலோ ஒன்றின் விலை 18.87 பவுண்டுகளிலிருந்து 17.20 பவுண்டுகளாகியுள்ளது.
கேனில் அடைக்கப்பட்ட தக்காளியின் விலை (390-400 கிராம்), 8 சதவிகிதம் குறைந்து 72 பென்ஸிலிருந்து 66 பென்ஸாகியுள்ளது.
பல்பொருள் அங்காடிகள் விற்பனை செய்யப்படாத பொருட்களில் கெரோசீன் விலைதான் அதிக அளவில் விலை குறைந்துள்ளது.
இந்நிலையில், துறைசார் நிபுணரான Richard Lim என்பவர், இந்த பண வீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது குறைந்த வருவாய் கொண்டவர்கள்தான்.
காரணம், உணவுக்கும் எரிபொருள் மின்சாரம் போன்ற பொருட்களுக்கும் அவர்கள் அதிகம் செலவிடுவதால், இந்த பணவீக்கம் அவர்களைத்தான் அதிகம் பாதிக்கப்போகிறத் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |